பிராந்திய பௌதிக திட்டங்;களைத் தயாரித்தல்

தேசிய மட்ட கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றுடன் ஐக்கியத்துடன் முன்னெடுக்கின்ற உள்நாட்டு அபிவிருத்திகளை ஒழுங்குமுறைப்படுத்துவது மற்றும் மீள் உருவாக்குதல் என்பவற்றுடன் சேர்த்து தேசிய மட்ட கொள்கைகளையும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் உள்ளூர் மட்ட செயற்பாட்டு கருத்திட்டங்களாக மாற்றுவதற்காகத் தேவையான சட்டகத்துடன் உள்ளூராட்சி மட்டத்தில் மற்றும் மாகாண மட்டத்தில் உள்ள அதிகாரசபைகளுக்குத் தேவையான பிராந்திய அபிவிருத்தி திட்டங்களை வழங்குதல். 2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத்தின் பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் (திருத்தச்) சட்டத்தின் 5யு (ன), மற்றும் (ந) என்பவற்றின் பிரகாரம், நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்காகத் திட்டங்களைத் தயாரித்தல் திணைக்களத்தின் பணிப்பாணையாக இருக்கின்றது.

பிராந்திய திட்டமிடல் குழுவின் உள்ளடக்கம்.

  • தவிசாளர் என்ற வகையில் மகாண சபைகளின் பிரதம செயலாளர்;
  • சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபையினால் பரிந்துரைக்கப்பட்ட மாகாணத்துக்குள் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி அதிகாரசபையின் பிரதிநிதி ஒருவர்.
  • மாகாணத்தின் மாவட்ட செயலாளர்கள்;
  • நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதி ஒருவர்.
  • நில அளவைகள் திணைக்களத்தின் நில அளவைகள் உதவி அத்தியட்சர் பதவிக்கு கீழ்படாத தரத்தில் உள்ள உத்தியோகத்தர் ஒருவர்.
  • வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதி ஒருவர், மற்றும்
  • அமைச்சரால் பெயர் குறிக்கப்படுகின்ற, பொருளாதார துறையில் அல்லது பௌதிக திட்டமிடல், நிர்வாகம் மற்றும் சூழலியல் அல்லது பௌதிக திட்டமிடல் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளில் திறமை பெற்ற மூன்று பேருக்கு மேற்படாத நபர்கள்.