தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையையும் திட்டத்தையும் தயாரித்தல்

2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத்தின் பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் (திருத்தச்) சட்டத்தின் 5யு (ய), (டி), மற்றும் (ப) என்பவற்றில் தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையை உருவாக்குதல் மற்றும் தேசிய பௌதிக திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் தேவையான மாற்றங்களுக்காக காலத்திற்குக் காலம் மீளாய்வுசெய்தல் என்பவை திணைக்ளத்தின் முதன்மை பணிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

தேசிய பௌதிக திட்டத்தின் விடயப்பரப்பு

2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் (திருத்தச்) சட்டத்தின் பொது ஏற்பாடுகளின் பகுதி 1இன் 2ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக

'காணி சம்பந்தமாக அவற்றில் கட்டிடங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காணியை அபிவிருத்தி செய்வதை ஒழுங்குமுறைப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் பொது நோக்கமாகக் கொண்டு சரியான உட்கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சௌகரியங்கள், கட்டிடக்கலை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அழகியல்;, இயற்கை அழகு என்பவற்றைப் பேணிக்காத்தல் என்பவற்றிற்காக தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையை உறுதிப்படுத்தி இந்தக் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒரு தேசிய பௌதிக திட்டத்தைத் தயாரித்தல்.'

தேசிய பௌதிக திட்டமிடல் பேரவையின் யாப்பு.

2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் (திருத்தச்) சட்டத்தின் பொது ஏற்பாடுகளின் பகுதி 1இன் 1ஆம் பிரிவின் பொது ஏற்பாடுகளுக்கு அமைவாக

பின்வருவோரை உள்ளடக்கி தேசிய பௌதிக திட்டமிடல் பேரவையை (இதனகத்துப் பின்னர் பேரவை எனக் குறிப்பிடப்படும்) ஸ்தாபித்தல்.

  • அரசாங்கத்தின் தலைவர் - மாண்புமிகு சனாதிபதிÆ தலைவர்
  • தேசிய பௌதிக திட்டமிடல் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர் உப தலைவராக செயலாற்றுவார்.
  • பொருளாதார திட்டமிடல் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • நிதி விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • காணி விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • விவசாய விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • கைத்தொழில் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • வீடமைப்பு விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • நகர அபிவிருத்தி விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • போக்குவரத்து விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • பெருந்தெருக்கள் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • துறைமுகங்கள் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • சிவில் விமான சேவைகள் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • கரையோரப் பாதுகாப்பு விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • சூழலியல் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • வனவளங்கள் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • சுற்றுலாதுறை விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • நீர்ப்பாசன விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • ன்சார விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • கலாசார விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • மகாணசபைகள் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • திட்டமிடல் அமுலாக்கள் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • சுகாதார விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ அமைச்சர்
  • அனைத்து மாகாணங்களின் முதலமைச்சர்கள்:
    • முதலமைச்சர், வட மாகாண சபை
    • முதலமைச்சர், மத்திய மாகாண சபை
    • முதலமைச்சர், வட மத்திய மாகாண சபை
    • முதலமைச்சர், கிழக்கு மாகாண சபை
    • முதலமைச்சர், வடமேல் மாகாண சபை
    • முதலமைச்சர், வட சப்ரகமுவ மாகாண சபை
    • முதலமைச்சர், தென் மாகாண சபை
    • முதலமைச்சர், மேல் மாகாண சபை
    • முதலமைச்சர், ஊவா மாகாண சபை