சம்பந்தப்பட்ட ஸ்தாபன சட்டங்களில் குறிப்பிடத்தக்க ஏற்பாடுகள் இல்லாவிட்டாலும், இந்தத் திணைக்களம் 1949ஆம் ஆண்டிலிருந்து 'புனித பிரதேசங்களை' பராமரிப்பதற்கும் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் அமுலாக்குவதற்கும் மரபு ரீதியான பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தது. இன்று புனித பிரதேசங்கள் திணைக்களத்தின் பணியில் பிரதான பங்கு வகிக்கின்றன.