தேசிய பௌதிக திட்டம் விரிவான இடம்சார்ந்த பணிச்சட்டகத்தை வழங்குவதன் காரணமாக, தேசிய பௌதிக திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடைமுறைசர்ந்த ஏற்பாட்டுடன் தொழில்நுட்ப ஏற்பாடும்; தேவைப்படுகிறது. தொழில்நுட்ப ஏற்பாடு மாகாண சபைகளுக்காக அல்லது விசேடமாக நியமிக்கப்பட்ட பிராந்தியங்களுக்காக தேசிய பௌதிக திட்டத்தை மாற்றுவதற்குத் தேவைப்படுகிறது.

ஆகவே, செயற்பாட்டின் நடைமுறைசர்ந்த ஏற்பாடு அமுலாக்க பிரிவின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. அதற்கு அமைவாக, பின்வரும் பணிகள் அமுலாக்க பிரிவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ன.

  • நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த மீளாய்வு மற்றும் தேசிய பௌதிக திட்டமிடல் குழுவுக்கு (NPPஊ) அறிவித்தல் மற்றும் சரியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தேசிய பௌதிக திட்டமிடல் குழுவிடமிருந்து (NPPஊ) உரிய வழிகாட்டலைப் பெறுதல்.
  • தேசிய பௌதிக திட்டமிடல் வரிசையில் உள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக முன்னுரிமையளிப்பதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்துடன் இணைப்பாக்கம் செய்தல்.
  • அத்தகைய கருத்திட்டங்கள் தேசிய பௌதிக திட்டத்துடன் இணங்கியொழுகுவதை உறுதி செய்வதற்கு ருனுயுஇ சுனுயு போன்ற அபிவிருத்தி முகவர் நிலையங்களுடன் இணைப்பாக்கம் செய்தல்.