சிறிய பட்டணங்களுக்கான அபிவிருத்தி திட்டங்;களைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்.

2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத்தின் பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் (திருத்தச்) சட்டத்தின் 5யு (ன), யின் கீழ் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், 1978ஆம் ஆண்டின் நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் 'நகர பிரதேசங்கள்' எனப் பிரகடனப்படுத்தப்படாத, சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகார சபைகள் தோல்வியடைந்த அல்லது கோரிக்கை விடுக்கின்ற உள்ளூர் பிரதேசங்களுக்காக அபிவிருத்தி திட்டங்களைத் தயாரிக்கும் கடமைகளும் செயற்பாடுகளும் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திணைக்களம் போதியளவு கவனம் செலுத்தத் தவறிய தேசிய ரீதியாகக் குறிப்பிடத்தக்க மற்றும் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அபிவிருத்தி செய்வதில் அபிவிருத்தி திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல். அவற்றைக் கவனிப்பதற்கு பொறுப்பு வகிக்கக்கூடிய மற்றும் தகுதிவாய்ந்த நிறுவகங்கள் இல்லாததன் காரணமாக, அவர்களுடைய நிலைமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதனால் நிலையான அபிவிருத்திக்கு வழிகாட்டும்படி அந்த அதிகாரசபைகள் உடனடியாக கவனம் செலுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளன. இந்த திணைக்களத்திற்கு சம்பந்தப்பட்ட சட்டத்தின் 5யு (உ)யின் கீழ் அவற்றை 'அபிவிருத்தி திட்டங்களுக்குள்' உள்வாங்குவதற்கும் அவற்றை சிறந்த முறையில் பேணுவதற்குத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் அந்தத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கும் ஏனைய நிறுவகங்களுக்கும் உதவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.