இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் அனுராதபுர பிரதேசத்தில் தொல்பொருள் பெறுமதியுடைய அத்துலுநுவர என்ற இடத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவததோடு, இந்தப் பிரதேசத்தை தொல்பொருள் ஒதுக்கிடமாக பிரகடனப்படுத்தி இந்தப் பிரதேசத்தில் உள்ள குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் மீளக் குடியமர்த்துவதாகும்.
மேலும் புனித பிரதேசத்திலிருந்து அகற்றப்படவுள்ள குடியிருப்பாளர்களுக்கு அனைத்து வசதிகளுடன் திட்டமிடப்பட்ட பட்டணத்தில் ஒரு நகர சூழலை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மல்வத்து ஒய தாழ் நிலப்பிரதேசத்தில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை வழங்குதல்.
அடையாளம் காணப்பட்ட குடியிருப்பாளர்களை அனுராதபுரத்தில் 'லொலுகஸ்வௌ' பிரதேசத்தில் 200 ஏக்கர் காணியில் புதிய பட்டணத்தில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள்.