::..எங்களைப் பற்றி..::
  1946ஆம் ஆண்டில் அரசசபையில் நகர மற்றும் உண்ணாட்டு கட்டளைச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 1947ஆம் ஆண்டு சனவரி மாதம் 1ஆந் திகதி, ஆளுநரின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றது. அதன் நோக்கமாவது, கட்டளைச் சட்டத்தின் பாயிரத்தில் விசேடமாக கூறப்பட்டுள்ளவாறு,  
  "ஸ்ரீலங்காவில் காணிகளைத் திட்டமிடுவது சம்பந்தமாகவும், அபிவிருத்தி சம்பந்தமாகவும் மேற்கொள்ளப்படும் இயக்கங்களைச் செய்வதற்காக அதிகாரம் வழங்குவதிலும், இயற்கை இன்பமூட்டு வாய்ப்புகளைக் காப்பாற்றுவதற்காகவும், களிவூட்டும், மற்றும் அழகு பொருந்திய பொருட்களையும், கட்டிடங்களையும் பேணி காப்பதிலும், கூறப்பட்ட இயக்கங்களுக்கு பக்கபலம் கொடுக்கும் நோக்கத்துடன் காணிகளை சுவீகரிக்கும் வசதிகளை வழங்குவதிலும்"  
  கட்டளைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் (அ) பிரகாரம், அடுத்தடுத்து நிகழும் விதத்தில், கட்டிட அமைப்புத் திட்டமிடலாளர் ஒருவராகிய திரு ஒலிவர் வீரசிங்க, ஏற்கனவே அரசாங்க நகர திட்டமிடலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர், பொறுப்பாளராக அமர்த்தப்பட்டுள்ளார். அன்று தொட்டு, 1989 வரை திணைக்களம், உள்ளூராட்சி விடயம் சம்பந்தமாக அமைச்சின் கீழ் பெரும்பாலும் வைக்கப்பட்டிருந்தது. பலகாலமாக இந்த விடயம் வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்பு வேலை என்னும் வகையில் இரட்டை விடயமாகியிருந்தது. 1989ஆம் ஆண்டில் அரசமைப்புத் திட்டத்தின் பதின்மூன்றாவது திருத்தத்துடள், மாகாண சபைகள் நிறுவப்படுவதோடு, இந்தத் திணை்ககளம் கொள்கை திட்டமிடல் மற்றும் செயற்பாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1993ஆம் ஆண்டில் அது திரும்பவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.  
  1946ஆம் ஆண்டு நகர மற்றும் உண்ணாட்டு திட்டமிடல் கட்டளைச் சட்டத்திலான 13ஆவது திருத்தம் 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதியில் ஸ்ரீலங்கர பாராளுமன்றத்தினால் ஏகோபித்த குரலில் அனுமதிக்கப்பட்டது. இந்தத் திருத்தத்தினால் தேவைப்பட்ட முக்கிய நிருவாக நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு, புதிய தேசிய பெளதீக திட்டமிடற் திணைக்களம் (தேபெளதிதி) முன்னராக நிறுவப்பட்டு, 2001 மே மாதம் 21ஆம் திகதி நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் மக்கள் பயன்படுத்துகை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது.  
     
  தேசிய பெளதீக திட்டமிடற் திணைக்களத்தின் செயற்பாடுகள்  
 
 
தேசிய பெளதீக திட்டக் கொள்கை ஒன்றை உருவாக்கல்
தேசிய பெளதீக திட்டமொன்றைத் தயாரித்தல்.
தேசிய பெளதீத் திட்டத்திற்காக உபாயவழி செயற்பாட்டினை உருவாக்கல்.
பிராந்திய அல்லது உண்ணாட்டு பெளதீக திட்டமிடல் அதிகாரங்களினால் அங்கீகரிக்கப்படக்கூடிய பெளதீக திட்டமிடல் வழிகாட்டிகளை தயாரித்தல்.
பிராந்திய மற்றும் உண்ணாட்டு பெளதீக திட்டங்களைத் தயாரித்தல் அல்லது மாகாண சபைகளுக்கும் உண்ணாட்டு அதிகாரசபைகளுக்கும் அவ்வாறு செய்வதற்கு உதவிசெய்தல்.
தேசிய பெளதீக திட்டமிடல் குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தேசிய பெளதீக திட்டமிடல் கொள்கைகளுக்கிணங்கிய திட்டங்கள் அமைச்சுகளுக்கிடையிலான தொடர்புக் குழுவிடம் சிபார்சு செய்தல்.
தேசிய பெளதீக திட்டமிடல் கொள்கையை பருவ அடிப்படையில் மீள நோக்குதல், தேசிய பெளதீக திட்டங்கள் மற்றும் தேசிய பெளதீக திட்டமிடல் உபாயவழிகள், ஆகியவற்றின் ஏதேனும் மாற்றங்களேர திட்டமிடல்களோ, உபாய வழிகளேர இருப்பின் அவற்றிற்காக உப இணைப்புக்குழுவிடம் சிபாரிசு செய்தல்.
தேசிய பெளதீகத் திட்டமிடல் செயற்படுவதை கண்காணித்தல்.
தேசிய பெளதீகத் திட்டமிடல் குழுக்காகவும், அமைச்சுகளுக்கிடையிலான இணைப்புக் குழுக்காகவும் ஒரு செயலகமாக செயற்படுதல்.
தேசிய பெளதீக திட்டமிடல் குழுவினாலும், அமைச்சுகளுக்கிடையிலான இணைப்புக் குழுவினாலும் பணிக்கப்படும் விதத்தில் செயற்படுதல்.
 
 
  தேசிய பெளதீக திட்டமிடற் திணைக்களத்தின் போக்கின்படி, தேசிய பெளதீக திட்டமிடல் கொள்கை, திட்டங்கள், உபாய வழிகள் என்பவற்றை உருவாக்குதல், ஸ்ரீலங்காவின், காணிகள் மற்றும் பிராந்திய நீரகங்கள் என்பனவற்றின் பொருளாதார, சமுதாய, பெளதீக மற்றும் சுற்றாடல் ஆகிய பாங்குகளின் விருத்தி மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றின் ஒருமைப்பாடுடனான நோக்குடன் பிராந்திய மற்றும் உண்ணாட்டு திட்டங்களூடாக கூறப்பட்ட தேசிய கொள்கைகளும், திட்டங்களும் செயற்படுவதை கண்காணிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும்.