National Physical Planning Department

தேசியப் பெளதீகத் திட்டம் தேசியப் பெளதீகத் திட்டத்தின் நடபடிமுறைகள்

பெளதீகத் திட்டத்தின் நடபடிமுறைகள்

தேசியப் பெளதீகத் திட்டமிடல் கொள்கை வரைவு, 2009 இன் 49 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1946 இன் 13 ஆம் இலக்க நகர கிராமியத் திட்டமிடல் கட்டளைச் சட்டத்தின் 5 A(a) பிரிவின் பிரகாரம் தேசியப் பெளதீகத் திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பின் கீழ் ஈடுபடுத்தப்பட்ட ஒரு குழுவினால் 2002 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை வரைவுக்கான அடிப்படையை உருவாக்குகின்ற 11 பின்னணிப் பத்திரங்களும் 08 குறைநிரப்புப் பத்திரங்களும் காணப் படுகின்றன.

தேசியப் பெளதீகத் திட்டமிடல், மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் தலைமை வகித்த தேசியப் பெளதீகத் திட்டமிடல் சபையினால் 2007.07.03 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது. நாடு முழுதிலும் அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கானதும் அதற்கு அதிகமான காலங்களுக்கானதுமான பாரியளவான கருத்திட்டங்களை இனம்கண்டு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக 2010 ஆம் ஆண்டு ஒரு திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டது. இலங்கையில் திட்டமிடப்பட்ட ஒரு நிலையில் உருவாகும் வாய்ப்புகளை பொது மக்களுக்கும், சாத்தியமான முதலீட்டாளர்களுக்கும் நன்கொடை முகவர் நிலையங்களுக்கும் சுட்டிக்காட்டும் பொருட்டு அத்தகைய கருத்திட்டங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் பட்டியல்படுத்தப் பட்ட பாரியளவான தேசிய கருத்திட்டங்கள் 2010.11.09 ஆம் திகதி அமைச்சுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு, அதன் பின்னர் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் தலைமை வகித்த தேசியப் பெளதீகத் திட்டமிடல் சபையின் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இந்தத் திட்டத்தை 2011.01.13 ஆம் திகதி அமைச்சரவை கருத்திற்கொண்டது.

  Copyright © 2011 | National Physical Planning Department. All Rights Reserved.
Developed in Association with Information and Communication Technology Agency of Sri Lanka
Last Update:
24-05-2016 05:04